18 வயது யுவதியை லாரியில் ஏற்றிச் சென்று கொடூரமாக வன்புணர்வு செய்த மூவரும் மாட்டினர்

வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 18 வயது யுவதியை வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி லொறியில் ஏற்றிச்சென்று  கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை அருக்கொட மற்றும் எகொடஉயன பிரதேசத்தை சேர்ந்த 45, 24 மற்றும் 23 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் கூட்டுப் பலாத்காரம் செய்த குற்றத்திற்காகவும், லொறியின் உரிமையாளர் அதற்கு உடந்தையாக இருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 10 ஆம் திகதி இரவு பாணந்துறை நகரில் வியாபாரம் செய்துவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த யுவதியை லொறியில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு அழைத்துச் சென்று வாத்துவ பிரதேசத்தில் உள்ள வெறிச்சோடிக் கிடந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

அங்கு லொறியின் முன்பகுதியில் வைத்து யுவதியை கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளனர். யுவதி எதிர்ப்பு தெரிவித்த போது, அவரது கழுத்தில் குத்தி வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளனர்

யுவதியை ஏற்றிச் சென்று கூட்டுப் பலாத்காரம் செய்த லொறி, பயமுறுத்தப் பயன்படுத்திய கத்தி, பருத்தி தலையணை என்பனவும் ஆதாரமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

https://hiru7.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/