19 வயது இளம்பெண் பாலியல் துஷ்பிரயோகம்; இரு இளைஞர்கள் கைது!

19 வயதான இளம்பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் நகர எல்லையில் வசிக்கும் 22 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை பிரதேசத்திலிருந்து அனுராதபுரத்துக்கு வந்த குறித்த யுவதி, வாடகை வீட்டில் தங்கியிருந்து உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் , யுவதியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று இளைஞர்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.