HomeAccident News2 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒருவர் பலி

2 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒருவர் பலி

மாவனெல்ல பகுதியில் இரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர்

நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றுமே மாவனெல்ல கனேகொடவில் மோதியதில் பேரூந்து ஓட்டுனர் உட்பட 23 பேர் காயமடைந்து மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் நீர்கொழும்பைச் சேர்ந்த 59 வயது நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒருவர் பலி - Lanka News - Tamilwin News 2 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒருவர் பலி - Lanka News - Tamilwin News

RELATED ARTICLES

Most Popular

Recent Comments