2,518 தாதியர் பயிற்சியாளர்களுக்கு நியமனம் !

2018ஆம் ஆண்டு தாதியர் பயிற்சியாளர்களாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட 2,518 பேருக்கு நியமனத்தை வழங்குவதற்கு திறைசேரி இணக்கம் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக முதற்கட்டமாக 1,000 தாதியர் பயிற்சியாளர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு முன்னதாக யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும், சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினர் முன்வைத்த கோரிக்கையை அடுத்து, சகல தாதியர் பயிற்சியாளர்களுக்கும் நியமனம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here