3 கோடி மதிப்புள்ள இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் ஒருவர் மாட்டினார்

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு பகுதியில் உள்ள புதர் ஒன்றுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 270,000 போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கபெற்ற புலனாய்வு தகவலுக்கு அமைய மன்னார் பொலிஸ் குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே தாழ்வுபாடு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இரண்டு பொதிகளில் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த போதை மாத்திரைகளின் தற்போதைய சந்தை மதிப்பு 3 கோடி என்பதுடன் போதை மாத்திரை கடத்தல் உடன் தொடர்பு பட்டதாக தாராபுரம் பகுதியை சேர்ந்த 22 வயதான சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் சான்று பொருள் மற்றும் சந்தேக நபர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது

3 கோடி மதிப்புள்ள இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் ஒருவர் மாட்டினார் - Lanka News - Tamilwin News 3 கோடி மதிப்புள்ள இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் ஒருவர் மாட்டினார் - Lanka News - Tamilwin News 3 கோடி மதிப்புள்ள இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் ஒருவர் மாட்டினார் - Lanka News - Tamilwin News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here