30 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கெய்னுடன் 26 வயதான நபரொருவர் கைது

கென்ய பிரஜையொருவர் 30 கோடி ரூபாய் பெறுமதியான 04 கிலோகிராம் கொக்கெய்னுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

எத்தியோப்பியாவிலிருந்து நேற்று (24) இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இவர் – கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கட்டார் – தோஹாவுக்கு பயணித்து, பின்னர் கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் இலங்கைக்கு புறப்பட்டுள்ளார்.

26 வயதான சந்தேக நபரை – இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள், வருகை முனையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

அவர் வைத்திருந்த 04 கிலோ எடையுள்ள 180 கொக்கெய்ன் சிறு பொதிகள் – அவரின் கைப் பொதிக்குள் இருந்த மூன்று உலோக டின்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக – கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

30 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கெய்னுடன் 26 வயதான நபரொருவர் கைது - Lanka News - Tamilwin News 30 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கெய்னுடன் 26 வயதான நபரொருவர் கைது - Lanka News - Tamilwin News 30 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கெய்னுடன் 26 வயதான நபரொருவர் கைது - Lanka News - Tamilwin News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here