3,000 தாதியர்களை புதிதாக இணைத்துக் கொள்ள பணிப்புரை

இலங்கையின் சுகாதாரத் துறைக்கு 3,000 தாதியர்களை புதிதாக இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆட்சேர்ப்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் அமைச்சரவைப் பிரேரணையைத் தயாரிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற அமைச்சின் தாதியர் துறையின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here