6 கோடி மதிப்பான ஐஸ் போதை பொருள் பறிமுதல் – நால்வர் கைது

இலங்கைக்கு கடத்துவதற்காக வேதாளை மீனவ கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கோடி மதிப்புள்ள 6 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்த மண்டபம் காவல்துறையினா் பெண் உட்பட நாலு பேரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு 6 கோடி எனவும் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நான்கு பேர் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஐஸ் போதை பொருட்களை சென்னையில் யாரிடம் இருந்து பெறப்பட்டது என்பது குறித்து தனிப்படை காவல்துறையினா் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை வழியாக இருநாட்டு பாதுகாப்பையும் மீறி பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் நாட்டு படகுகளில் தொடர்ந்து கடத்தப்பட்டு வரும் சம்பவம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

6 கோடி மதிப்பான ஐஸ் போதை பொருள் பறிமுதல் – நால்வர் கைது - Lanka News - Tamilwin News 6 கோடி மதிப்பான ஐஸ் போதை பொருள் பறிமுதல் – நால்வர் கைது - Lanka News - Tamilwin News 6 கோடி மதிப்பான ஐஸ் போதை பொருள் பறிமுதல் – நால்வர் கைது - Lanka News - Tamilwin News

மேலும் அறிய  மன்னாரை உலுக்கிய 10 வயது சிறுமியின் மரணம்-சற்று முன் வெளியான மேலதிக தகவல்..! {படங்கள்}

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here