எதிர்வரும் 13.02.2024 முதல் 16.02.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக சிரேஷ்ட வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.

அதேவேளை நாளை 12.02.2024 மதியத்திற்கு பிறகு வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு சிறிய அளவில் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

விவசாயிகள் அறுவடை மற்றும் அறுவடைக்கு பிந்திய செயற்பாடுகளை மழையிலிருந்து பாதுகாப்பதற்கான உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மேற்கொள்வது சிறந்தது எனவும் நாகமுத்து பிரதீபராஜா மேலும் தெரிவித்தார்