Home CRIME NEWS

CRIME NEWS

CRIME NEWS – தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்
1551677949 dead body 2 1 2.jpg

பெண்ணின் சடலம் மீட்பு.!

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகசேணை தபால் அலுவலகத்தின் பின் பகுதியில் தலவாக்கலை மேல் கொத்மலை நீர் தேக்கத்திற்கு நீரேந்தி செல்லும் அகரகந்தை ஆற்றில் இனம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று தண்ணீரில் மிதந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. நாகசேணையிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி பஸ்சில் பயணித்த பயணிகள் குறித்த ஆற்றில் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்து இது தொடர்பாக லிந்துலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அத்துடன் பிரதேச மக்களுக்கும் இவ்விடயம் தெரிய வந்துள்ளது.இருப்பினும் சடலமாக தண்ணீரில் கிடக்கும் பெண் […]
arrested 2.jpeg

பிக்கு கொலை – கைக்குண்டுடன் ஒருவர் கைது

0
மல்வத்து – ஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு / வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் இவர் கைது செய்யப்ப்டுள்ளார். மேலும் சந்தேகநபரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Jaffna hospital front view.jpg

மது போதையில் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட இருவர்...

0
யாழ். போதனா வைத்தியசாலையில் மது போதையில் அத்துமீறி நுழைய முற்பட்ட இருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மது போதையில் போதனா வைத்தியசாலை மதிலினால் ஏறி வைத்திய சாலைக்குள் உட்புகுந்த இருவரை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிஸார் இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை யாழ். போதனா வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் கைபேசிகள் உள்ளிட்டவை […]
arrest040 1659861944 1660133435.jpg

15 வயது மகளை துஷ்பிரயோகம் செய்ய உதவிய தந்தை கைது!

0
தன்னுடைய மகளை துஷ்பிரயோகம் செய்வதற்கு ஒத்தாசை நல்கினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அச்சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்ட சம்பவமொன்று மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமி வன்புணர்வுக்கு உட்படுது்தப்பட்டார். இந்த குற்றத்திற்கு உதவி குற்றச்சாட்டிலேயே, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையை ஹம்பேகமுவ பொலிஸார் கடந்த 13ஆம் திகதியன்று கைது செய்துள்ளனர். இக்குற்றச் சம்பவம் 2023 நவம்பர் 28ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளதுடன், ஹம்பேகமுவ, கொடவெஹரமங்கட, திஹியாகலையைச் சேர்ந்த 55 வயதுடைய தந்தையே கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணின் காதலனை அழைத்துச் சென்று கணவன் மனைவியாக வாழ்வதற்கு ஊக்குவித்த குற்றஞ்சாட்டிலேயே சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியும் அதே பகுதியில் வசிக்கும் இளைஞனும் பொலிஸாரால் முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஹம்பேகமுவ பொலிஸார், மகளை பலாத்காரம் செய்ய ஊக்குவித்தார் என்றக் குற்றச்சாட்டில் அச்சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளனர்.
பாடசாலை மாணவி.jpg

தாயை தாக்கி விட்டு வீதியில் வைத்து கடத்தப்பட்ட மாணவி

0
தனியார் வகுப்புக்குச் சென்றுவிட்டு தாயுடன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவர், தனது காதலன் என கூறிக்கொண்ட இளைஞனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்துகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றாதாகவும், கடத்தப்பட்ட மாணவியின் தாயை தாக்கி விட்டே மாணவியைக் கடத்தி சென்றதாக முறைப்பாடு செய்துள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர். ஹொரணை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி, மத்துகம பிரதேசத்தில் உள்ள தனியார் வகுப்புக்கு ஒன்றுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது , முச்சக்கரவண்டியில் மற்றுமொரு நபருடன் வந்த சந்தேக நபர் மாணவியை கடத்திச் சென்றதாக அவரின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். மாணவி கடத்தப்பட்ட முச்சக்கரவண்டியில் தாய் ஏற முற்பட்டதையடுத்து சந்தேகநபர் அவரை உதைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதேசமயம் சந்தேக நபர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் […]

LATEST POSTS