பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் ரீதியில் கவர்ந்திழுக்கும் வகையில் அவரது கைத்தொலைபேசிக்கு தொடர்ச்சியாக ஆபாச புகைப்படங்கள் மற்றும் வட்ஸ்அப் செய்திகளை அனுப்பிய சந்தேகத்திற்குரிய பாடசாலையின் பிரதி அதிபர் கைது செய்யப்பட்டு நேற்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்தனகல்ல ஊராபொல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் அந்தப் பாடசாலையின் ஒழுக்காற்று ஆசிரியரும் ஆவார்
சம்பந்தப்பட்ட பிரதி அதிபர் தனது கையடக்கத் தொலைபேசியில் அவரின் அந்தரங்க உறுப்புகளை புகைப்படம் எடுத்து வட்ஸ் அப் மூலம் தரம் 11 இல் பயிலும் மாணவிக்கு அனுப்பியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், மாணவியை தனது அலுவலகத்திற்கு அழைத்து அத்துமீறி நடத்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மகளின் கைத்தொலைபேசியை தாயார் பரிசோதித்த போது, பிரதி அதிபரின் குறுந்தகவல்களை பார்த்து, மகளிடம் விசாரித்த போது, நடந்த விடயங்கள் வெளிப்பட்டன.
தாயும், மகளும் பொலிசாரிடம் முறையிட்டனர்.
கைதானவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 47 வயதானவர்.
சந்தேகத்திற்குரிய இந்த பிரதி அதிபர், தரம் 11 மாணவி ஒருவருக்கு முன்னரும் இவ்வாறான வட்ஸ்அப் செய்திகளை அனுப்பியிருந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.