Home Jaffna News

Jaffna News

Jaffna News – தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்
Polish 20240223 134240659.jpg

யாழில் சிறுவர் இல்ல மாணவன் மீது ஆசிரியர் மூர்க்கதனமான தாக்குதல்..!

0
திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சிறுவர் இல்ல மாணவன் மீது ஆசிரியர் ஒருவரால் மிலேச்சத்தனமாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 9ஆம் தரத்தில் கல்விபயிலும் மாணவன் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறைக்குப் பொறுப்பான ஆசிரியர் மாணவனை அழைத்துள்ளார். எனினும் மாணவன் அந்த இடத்துக்குச் செல்லாததையடுத்து கோபமடைந்த ஆசிரியர் உடலில் காயங்கள் ஏற்படும் வகையில் மாணவனைப் பெரிய தடியால் தாக்கியுள்ளார். இதனால் சிறுவனின் கைகளில் இரத்தக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிறுவர் இல்ல மாணவன் என்று தெரிந்தும் இப்படி மனிதாபிமானம் இல்லாமல் […]
IMG 20240222 WA00802.jpg

யா/கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை பழைய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

0
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை பழைய மாணவர்களுக்கான பழைய மாணவர் சங்க தெரிவுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் பழைய மாணவர் சங்க தெரிவு இடம்பெறாமல் இருந்ததால் பழைய மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க பழைய மாணவர் சங்க தெரிவுக்கான திகதியிடப்பட்டு பாடசாலை அதிபரால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது வருகின்ற 25.02.2024 ஞாயிற்றுக் கிழமை காலை 09.00 மணியளவில் அதிபர் தலைமையில் பாடசாலை பொது மண்டபத்தில் தெரிவு இடம்பெறும் என்பதால் பழைய மாணவர்கள் அனைவரையும் சமூகம் தருமாறும் கேட்டுக் […]
Polish 20240222 192422207.jpg

யாழில் மோட்டாரில் பயணித்த இளைஞனுக்கு காத்திருந்த பயங்கரம்..!

0
வீதியில் பயணித்த இளைஞரை தாக்கி, அவரது மோட்டார் சைக்கிளை கும்பலொன்று கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இருந்து நாவற்குழி நோக்கி யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை வழியே மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞரை, அரியாலை பகுதியில் ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளது. அவ்வேளை, மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்திவிட்டு இளைஞர் கும்பலிடமிருந்து  தப்பியோடியுள்ளார். அதன் பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட கூட்டத்தினர் அங்கிருந்த இளைஞரின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றுள்ளனர். இந்த […]
IMG 20240218 WA0065.jpg

யாழில் கணவாய் கொப்புகளுடன் சிக்கிய அறுவர்..!{படங்கள்}

0
வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்பு ஒன்றை முன்னெடுத்தனர். கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கடந்த 16.02.2024 வெள்ளிக்கிழமை மாமுனை கடற்பகுதியில் இருந்து சட்டவிரோத கணவாய் கொப்புகளை ஏற்றிக் கொண்டு கடலுக்கு செல்ல முற்பட்ட போது ஆறுபேர் படகுகளுடன் கைது செய்யப்பட்டனர். வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகளை குறுகிய காலத்துக்குள் கட்டுக்குள் கொண்டுவருவதாக உறுதியளித்த கடற்படையினர் தொடர்ந்து கடல்,தரை என திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு பலரை கைது செய்து வருகின்றனர். […]
IMG 20240215 WA0109.jpg

யாழ் வருடாந்த பொலிஸ் அணிவகுப்பும்-பரிசோதனையும்..!{படங்கள்}

0
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த பொலிஸ் அணிவகுப்பும், பொலிஸ் பரிசோதனையும் இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வும் பொலிஸ்ஸ் அணிவகுப்பு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது குறித்த பரிசோதனை நிகழ்வில் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்த  பரிசோதனைகளை முன்னெடுத்ததோடு பொலிசாரின் அணிவகுப்பு மரியாதையும் இடம் பெற்றது. அணிவகுப்பு நிகழ்வில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றும் பொலிசாரின் சீருடைகள், ஆயுதங்கள் வாகனங்கள், பரிசோதிக்கப்பட்டதோடுபொலிசாருக்கான விசேட அறிவுரைகளும் […]
GridArt 20240212 210521564 scaled.jpg

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி தூக்கிட்டு உயிரிழப்பு.!

0
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 12.02.2024 இன்று பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்ததினால் உயிரிழந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதாரமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளார் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 அகவையுடைய உயர்தர மாணவியான நிதர்சினி என்பவரே இவ்வாறு தவறான முடிவினை எடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வீட்டில் பெற்றோர்கள் உறவினர்கள் இல்லாத நிலையில் இருந்த குறித்த மாணவி தனது அறைக்குள் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்ற நிலையில் காணப்பட்டுள்ளார். இந்த சம்பத்தினை தொடர்ந்து பிரதேச […]

LATEST POSTS